Page Loader
"மனிதாபிமானம் நிறைந்தவர் அஜித்குமார்": நடிகர் பொன்னம்பலம் புகழாரம்
உதவி எனக்கேட்டதும் சிறுதும் யோசிக்காமல் உதவுபவர் அஜித் என பொன்னம்பலம் பாராட்டியுள்ளார்

"மனிதாபிமானம் நிறைந்தவர் அஜித்குமார்": நடிகர் பொன்னம்பலம் புகழாரம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2023
04:23 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், கொரோனா காலகட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இறக்கும் தருவாயில் இருந்ததாக கூறினார். இறந்து கிட்னிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து, தற்போது தேறி வருகிறார். இந்நிலையில், தனது நிலை குறித்து பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியின் போது அஜித் தன்னுடைய சகோதரனை போல எனவும், ஆனால், தான் மரணப்படுக்கையில் இருக்கும் போது ஒரு முறை கூட என்னை அழைத்து அவர் பேசவில்லை என மிகவும் வருத்தப்படுவதாக அவர் கூறி இருந்தார். அவரின் அந்த பேட்டிக்கு அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்தார் பொன்னம்பலம். தற்போது ஒரு தனியார் ஒட்டகத்தின் பேட்டியில் அதற்கு விளக்கம் தந்துள்ளார்.

அஜித்

அஜித்தை புகழ்ந்த பொன்னம்பலம்

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, "நடிகர் அஜித்குமார் மனிதநேயம் மிக்கவர். ஒருமுறை எனது நண்பர் ஒருவரின் பையனுக்கு ஹார்ட் ஆபரேஷனுக்கு கிட்டத்தட்ட 58 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. நான் கூறுவது 25 வருடங்களுக்கு முன்னர். அப்போது எனக்கும், அஜித்துக்கும் ஷூட்டிங். அன்று காலையில் தான் நான் அவரிடம் இந்த விஷயத்தை கூறினேன். அவரும் சரி பார்க்கலாம் என்றார். மதிய உணவு இடைவேளையின் போது அவருக்கு நினைவூட்டலாம் என பேச சென்ற போது, காலைலயே கட்டியாச்சே என்றார். ஒருவர் உதவி எனக்கேட்டு வந்துவிட்டால், உடனே அதை செய்து தரும் நல்லெண்ணம் உடையவர் அஜித்" என பாராட்டியுள்ளார் பொன்னம்பலம்.

Instagram அஞ்சல்

பொன்னம்பலம் வீடியோ