இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மீண்டும் சோகம்: இசையமைப்பாளர் சபேஷின் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் தொடர்ச்சியான சோகங்கள் அரங்கேறி வருவது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இசையமைப்பாளர் சபேஷ் காலமான நிலையில், தற்போது அவரது மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் திடீரென காலமானார். தனது தந்தையை போலவே கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட கார்த்திக் சபேஷ், தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிகராக வலம் வந்துள்ளார். தம், வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை மற்றும் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது 37-வது வயதில் காலமான கார்த்திக் சபேஷிற்கு ரம்யா கார்த்திக் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
சபேஷ் - முரளி
சபேஷ் - முரளி இசைக் கூட்டணி
மறைந்த சபேஷ், தனது சகோதரர் முரளியுடன் இணைந்து 'சபேஷ் - முரளி' என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவாவின் வழிகாட்டுதலில் திரையுலகில் நுழைந்த இந்தக் கூட்டணி, சமுத்திரம், தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, பொக்கிஷம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் தங்களது சிறந்த இசைப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக 68 வயதுடைய சபேஷ் உயிரிழந்தார்.
கடந்த வாரம் இசையமைப்பாளர் தேவா உயிரிழந்தார்.
அந்தத் துயரம் மறைவதற்குள், தற்போது கார்த்திக் சபேஷ் தற்போது உயிரிழந்திருப்பது அக்குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகியுள்ளது.