LOADING...
திடீரென ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி; என்ன நடந்தது?
நடிகர் கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்பு தெரிவித்துள்ளார்

திடீரென ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி; என்ன நடந்தது?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 24, 2024
05:02 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் கார்த்தி இன்று ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணிடம் மன்னிப்பு தெரிவித்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், "அன்புள்ள பவன்கல்யாண் சார், உங்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன், எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை அன்புடன் பின்பற்றுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவு ட்ரெண்ட் ஆகி வரும் இந்த நேரத்தில், எதற்காக இந்த திடீர் மன்னிப்பு என குழம்புவர்களுக்காக:

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

பவன் கல்யாணின் எச்சரிக்கை

Advertisement

என்ன நடந்தது?

மெய்யழகன் படவிழாவில் லட்டு பற்றி பேசப்பட்டது சர்ச்சையானது

இந்த சூழலில், நடிகர் கார்த்தியின் மெய்யழகன் தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் சிறுத்தை படத்தில் இடம்பெற்ற லட்டு நகைச்சுவை காட்சியை குறிப்பிட்டு லட்டு வேண்டுமா என கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் கார்த்தி, 'இப்போது லட்டு குறித்து பேசக்கூடாது. அது ஒரு சென்சிட்டிவான விவகாரம் அது. எனக்கு அது வேண்டாம்' என சிரித்துக்கொண்டே கூறினார். இருப்பினும் தொகுப்பாளர், 'உங்களுக்கு மோதிச்சூர் லட்டு தருகிறோம்" என கூற, கார்த்தி, "எனக்கு லட்டே வேண்டாம்" என்றார். அவரது பேச்சுக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து சிரித்தனர். எனினும் இந்த பேச்சு ஆந்திர துணை முதல்வரால் ரசிக்கப்படவில்லை.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement