இனி 'ஜெயம்' ரவி இல்லை..ரவி மட்டுமே; 3 முக்கிய முடிவுகளை அறிவித்த நடிகர்!
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி.
அவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்ற படம் பொங்கலை முன்னிட்டு நாளை திரைக்கு வரவுள்ளது. நித்யா மேனன் உடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்.
இந்த படம் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் ரவி.
அதன்படி,"இனி என்னை ஜெயம் ரவி என யாரும் அழைக்க வேண்டாம், ரவி அல்லது ரவி மோகன் என்றே அழைக்கப்பட விரும்புகிறேன்" என தெரிவித்து இருக்கிறார்.
அவரது அப்பா மோகன் தயாரிக்க, அண்ணன் ராஜா இயக்கத்தில் வெளியான 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானதால், இத்தனை நாட்கள் அவர் 'ஜெயம்' ரவி என்றே குறிப்பிடப்பட்டு வந்தார்.
முடிவுகள்
புத்தாண்டில் புதிய முடிவுகள் எடுத்துள்ளதாக அறிவித்த ரவி
மேலும், நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்திலும், அர்த்தமுள்ள கதைகளை திரைக்கு கொண்டு வரும் நோக்கத்திலும், திரைத்துறையில் தான் கொண்டுள்ள அளவில்லா அன்பின் பத்திரமாக ரவி மோகன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருப்பதாகவும் அறிவித்து உள்ளார்.
அதோடு, தன்னுடைய ரசிகர் மன்றத்தை அறக்கட்டளையாக மாற்றுவதாகவும் அவர் அறிவித்தார்.
அதன் படி, 'ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளை' என மாற்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பொங்கலுக்கு ரவி எடுத்துள்ள இந்த முடிவுகள் அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களை தரவேண்டும் அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பழையன கழிதலும், புதியன புகுதலும் 🌞#HappyPongal 🌾#Ravi#RaviMohan#RaviMohanStudios#RaviMohanFansFoundation pic.twitter.com/K8JEWuMYW8
— Ravi Mohan (@iam_RaviMohan) January 13, 2025