
தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம்'கேப்டன் மில்லர்'.
பீரியாடிக் கதைக்களம்கொண்ட இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
பிரியங்கா மோகன், ஜான்கொக்கன், சுமேஷ்மூர், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வரும் நிலையில், பீரியாடிக் படம் என்பதால் படப்பிடிப்பு காடு, மலை போன்ற பகுதிகளிலேயே அதிகளவு நடந்துவருகிறது என்றும் கூறப்படுகிறது.
மூன்று பாகங்களாக எடுக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், முதல்பாகம் சுதந்திரத்திற்கு முன்னர் அதாவது 1940ம்ஆண்டு காலத்தில் நடப்பதுப்போன்று படமாக்கப்பட்டு வருவதாகத்தெரிகிறது.
இதனிடையே இப்படத்தில் தனுஷ் போராளியாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டநிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தனுஷின் 'கேப்டன் மில்லர்' போஸ்டர்
Captain Miller First look ! Respect is freedom pic.twitter.com/DDrFjjO46r
— Dhanush (@dhanushkraja) June 30, 2023