Page Loader
நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்
நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்; உடன் நடிகர் அருண் பாண்டியன் மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் குடும்பத்தினர்

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 13, 2023
09:56 am

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில், அசோக் செல்வனுக்கு தனி இடம் உண்டு. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'போர் தொழில்'. சரத் குமாருடன் அவர் நடித்திருந்த இந்த திரைப்படம், நேர்மறையான விமர்சனங்களை பெற்றது மட்டுமின்றி, தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது எனலாம். இந்நிலையில், அசோக் செல்வன், பழம்பெரும் நடிகர் அருண் பாண்டியனின் மகள், நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து, திருமணம் செய்யவுள்ளார் என சில வாரங்கள் முன்னரே தெரிவித்திருந்தோம். அதன்படி, இவர்கள் திருமணம், இன்று(செப்டம்பர் 13) காலை 6-7 முகூர்த்த நேரத்தில், திருநெல்வேலியில், இட்டேரி என்கிற கிராமத்தில் உள்ள அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில், அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. இவர்கள் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

நடிகை கீர்த்தி - நடிகர் அசோக் செல்வன்