வைரலாகும் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமண பத்திரிக்கை
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில், அசோக் செல்வனுக்கு தனி இடம் உண்டு. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'போர் தொழில்'.
சரத் குமாருடன் அவர் நடித்திருந்த இந்த திரைப்படம், நேர்மறையான விமர்சனங்களை பெற்றது மட்டுமின்றி, தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது எனலாம்.
இந்நிலையில், அசோக் செல்வன், பழம்பெரும் நடிகர் அருண் பாண்டியனின் மகள், நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து, திருமணம் செய்யவுள்ளார் என சென்ற வாரம் தெரிவித்திருந்தோம்.
அதன்படி, அவர்களின் திருமண பத்திரிக்கை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்திரிகையின் படி, இவர்கள் திருமணம், திருநெல்வேலியில், இட்டேரி என்கிற கிராமத்தில் உள்ள அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில், வரும் செப்டம்பர் 13-ந் தேதி, காலை 6-7 முகூர்த்த நேரத்தில் நடைபெறவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமண பத்திரிக்கை
#AshokSelvan, #KeertiPandian Wedding Invitation 🫰
— Siva Prasanth (@Sivaprasanth5) August 21, 2023
✨ Date - 13th September
✨ Venue - Sethu Ammal Pannai, Tirunelveli pic.twitter.com/VbwMXzXlJ6