LOADING...
'கில்லி' பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பிறந்தநாள்: அவரை பற்றி ஒரு சிறு தொகுப்பு
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் ருபாலி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

'கில்லி' பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பிறந்தநாள்: அவரை பற்றி ஒரு சிறு தொகுப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 19, 2023
08:32 am

செய்தி முன்னோட்டம்

'தில்' திரைப்படத்தில், DSP ஷங்கர் கதாபாத்திரத்தில், 'சியான்' விக்ரமிற்கு வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் தான், ஆஷிஷ் வித்யார்த்தி. இன்று அவர் தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நாளில், அவரை பற்றி சில தகவல்கள் இதோ: டெல்லியில் பிறந்து வளர்ந்த ஆஷிஷ் வித்யார்த்தியின் தந்தை ஒரு மலையாளி, தாய் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். இவரின் பெற்றோர்கள் இருவருமே கலை உலகில் இருந்ததாலோ என்னவோ, இவருக்கு சிறு வயது முதல் நடிப்பார்வம் தொற்றிக்கொண்டது. இதற்காக, டெல்லியில் இருக்கும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் சேர்ந்தார். தொடர்ந்து 'ஆக்ட் ஒன்' என்ற பிரபலமான மேடை நாடக குழுவில் தன்னை இணைத்து கொண்டார். இவரின் நடிப்பு திறமையை கண்டு, பாலிவுட்டின் கதவுகள் திறந்தன.

card 2

'கில்லி' அப்பா முதல் 'உத்தமபுத்திரன்' பெரியமுத்து கவுண்டர் வரை

தொடர்ந்து பல மொழிகளில் தனது அழுத்தமான நடிப்பால் முத்திரை பதித்த இவரை, தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்த பெருமை, இயக்குனர் தரணியையே சேரும். தொடர்ந்து, ஏழுமலை, பகவதி, தமிழன், ஆறு, என பல படங்களில் வில்லன் கதாபாத்திரம் செய்தவர், முற்றிலுமாக வேறு அவதாரம் எடுத்தது, 'கில்லி' திரைப்படத்தில். ஆரம்பத்தில் காமெடி வில்லனாக தோன்றி, படத்தின் இரண்டாம் பாதியில் பாசமான தந்தையாக உருமாறியிருப்பார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியவர், கந்தசாமி, அனேகன் போன்ற படங்கள் மூலம், ரசிகர்களை கவர்ந்தார். 'உத்தமபுத்திரன்' படத்தில் பெரியமுத்து கவுண்டர் கதாபாத்திரம் மூலமாக தன்னால் காமெடியிலும் கலக்க முடியும் என நிரூபித்தார் ஆஷிஷ் வித்யார்த்தி.