KGF -3 இல், இயக்குனர் பிரஷாந்த் நீலுடன் கைகோர்க்கும் அஜித் குமார்?
டிடிநெக்ஸ்டில் வெளியான செய்தியின்படி, நடிகர் அஜித்தை தனது சினிமாட்டிக் யூனிவெர்சில் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி உள்ளாராம் KGF புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல். இந்த செய்தியின்படி, 'விடாமுயற்சி' படப்பிடிப்பிற்கு இடையில் 'தல' அஜித்தை சந்தித்த பிரஷாந்த் நீல், மூன்று வருட கால்ஷீட் கேட்டுள்ளாராம். இந்த இடைவேளையில் அவரை வைத்து இரண்டு படங்கள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அதில் ஒன்று அஜித்துக்காக பிரத்யேகமாக எழுதப்பட்ட கதை எனவும், அதனை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தெரிய வந்ததுள்ளது. அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் உடன் 'குட் பேட் அக்லீ' படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
KGF - 3 இல் அஜித்தை இணைக்க திட்டம்
இயக்குனர் பிரஷாந்த் நீல், இரண்டு படங்கள் இயக்க போவதாக கூறப்படும் நிலையில், இரண்டாவது படம், KGF வரிசையில் இணையும் என்றும், அதில் யாஷ் மற்றும் அஜித் இருவரையும் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி உறுதியானால், KGF -3 இல் நடிகர் அஜித் நடிப்பது உறுதியாகிறது. இதன் மூலம் அவரும் சினிமாட்டிக் யூனிவெர்சில் இணைகிறார். அஜித் முன்னதாக பில்லா-1 , பில்லா -2 என்ற தொடர் படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி வெளியானதில் இருந்து காலை முதல் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.