Page Loader
'ட்ராவல்! பயணங்கள் உங்களை இன்னும் சிறந்த மனிதராக மாற்றும்': பயணத்தின் அவசியம் பற்றி பேசும் 'தல' அஜித்
பயணத்தின் அவசியம் பற்றி பேசும் 'தல' அஜித்

'ட்ராவல்! பயணங்கள் உங்களை இன்னும் சிறந்த மனிதராக மாற்றும்': பயணத்தின் அவசியம் பற்றி பேசும் 'தல' அஜித்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2024
04:31 pm

செய்தி முன்னோட்டம்

பொதுவாக பொதுவெளியில் அதிகம் காணப்படாத நடிகர் அஜித், சமீப காலங்களில் தனது PRO மூலம் தன்னுடைய ட்ராவல் திட்டம் பற்றியும், தன்னுடைய ரேஸ் திட்டம் பற்றியும் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு, ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்று அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அஜித் ஒரு மனிதன் எதற்காக பயணம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அதோடு தன்னுடைய பயண அனுபவம் பற்றியும் பேசியுள்ளார். அஜித் சில காலமாக பைக் ட்ராவல் அதிகம் மேற்கொள்கிறார் என்பதை அறிந்திருப்பீர்கள். அவர் 'துணிவு' படத்தின்போது, இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வீடியோ

வீடியோவில் அஜித் கூறியது என்ன?

"பயணத்தின்போது வெவ்வேறு நாடு, மத, மொழியின மக்களை நான் சந்தித்தேன். அவர்களின் கலாசாரத்தை அனுபவித்ததுடன் அவர்களுடன் நெருங்கி பழகினேன்". "சாதியும், மதமும் நீங்கள் பார்க்காத நபரின் மீதும் வெறுப்பை ஏற்படுத்தும் என்ற பேச்சு உள்ளது. ஆனால், ஒரு பயணம் சாதி மத பேச்சுக்களை தகர்த்து அனைவரிடமும் நெருங்கி பழக உதவுகிறது". "மதம், இனத்தை தாண்டி மக்களை நேசிக்க வைக்கக் கூடியது பயணங்கள். பயணங்களே நல்ல பாடங்களை நமக்கு கற்றுக் கொடுக்கின்றன. பயணங்கள் உங்களை இன்னும் சிறந்த மனிதராக மாற்றும்" என்று அஜித் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.