Page Loader
வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த விரைந்த அஜித் குமார் 
வெற்றி துரைசாமியுடன் நடிகர் அஜித்

வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த விரைந்த அஜித் குமார் 

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2024
04:10 pm

செய்தி முன்னோட்டம்

ஹிமாச்சல பிரதேசத்தின் சட்லெஜ் நதியில் இருந்து, கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமியின் உடல், நேற்று(12-பிப்ரவரி) மாலை மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம், வெற்றி துரைசாமியின் உடல், இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் அஜித், வெற்றி துரைசாமியின் வீட்டிற்கு விரைந்துள்ளார். வெற்றி துரைசாமி, நடிகர் அஜித்திற்கு நெருங்கிய நண்பர் என அறியப்படுகிறார். வெற்றியின் திருமணத்திற்கு மணமகன் தோழனாகவும், குடும்பத்தினர் அனைவருடனும் கலந்து கொண்டார், அஜித். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வெற்றி துரைசாமியின் நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அஞ்சலி செலுத்த விரைந்த அஜித்