அடுத்த செய்திக் கட்டுரை

மீண்டும் கார் ரேஸ் களத்தில் இறங்கிய 'தல'அஜித்
எழுதியவர்
Venkatalakshmi V
Sep 27, 2024
07:30 pm
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித், ரேஸிங்கில் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஃபார்முலா கார் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்ட வெகு சில இந்தியர்களுள் அவரும் ஒருவர். அதே போல முதல் நடிகரும் அவரே.
இடையில் கார் ரேசிங்கிற்கு ஓய்வு தந்திருந்த அவர், தற்போது பிரிட்டனில் நடைபெறும் ஜிடி4 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள, துபாயில் பயிற்சி செய்து வருகிறார்.
அவர் ரேஸிற்காக பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி செய்யும் வீடியோவை அவரின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
அஜித் கடந்த ஜூலை மாதம், ரூ. 9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் மற்றும் சமீபத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள போர்ஷே ஜிடி3 வகை ரேஸிங் கார் ஒன்றையும் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
GETTT!!! 🔥
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) September 26, 2024
SETTTT!!! 🔥
GOOOO!!!! 🔥🏎️#AjithKumar | #VidaaMuyarchi pic.twitter.com/MRMIdG9e0S