40 ஆண்டுகளுக்கு மேல் காமெடி திரையுலகை கட்டியாண்ட கவுண்டமணியின் பிறந்தநாள்!
கோலிவுட்டின் மறக்க முடியாத நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர். சுப்ரமணிய கருப்பையா என்பது கவுண்டமணியின் உண்மையான பெயர் ஆகும். கவுண்டமணி, செந்தில் ஜோடியின் காமெடிகளை இந்த தலைமுறையினரும் வயிறு குலுங்க சிரிப்பதை காணலாம். 40 ஆண்டுகளுக்கும் மேல் தனது காமெடிகளால் ஆதிக்கம் செலுத்திய இவரின் காமெடிகள் இன்றளவும் மீம் கன்டென்ட்கள் மற்றும் 2கே கிட்ஸ்கள் கூட ரசிக்க கூடிய காமெடியாக உள்ளது. பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள வல்லகுண்டபுரம் கிராமத்தில் 1939ம் ஆண்டு மே 25ம் தேதி பிறந்தார். காமெடியின் லெஜெண்ட் கவுண்டமணி அவர்கள் இன்று தனது 84ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆரம்பத்தில் நாடகங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து பின்னர் சினிமாவிற்குள் நுழைந்தார். கவுண்டமணியின் நகைச்சுவையில் எப்போதும் முற்போக்கு சிந்தனை வெளிப்படையாக இருக்கும்.