
பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் பிறந்தநாள்; அவரை பற்றி சில தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ராஜிவ் மேனன். அவரின் கேமரா மூலமாக, நமக்கு பல அழகான கதாபாத்திரங்களும், காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. இன்று அவரின் 60வது பிறந்தநாள். அவரை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம். ராஜிவ் மேனன், பிறந்தது கேரளாவில். இவரின் பதின் பருவத்தில், மெட்ராசிற்கு வந்தார். அவரது பக்கத்து வீட்டில் ஒரு பத்திரிகையாளர் இவருக்கு கேமரா ஒன்றை பரிசளித்தாராம். அதன் பின்னர்தான் இவருக்கு அதில் ஆர்வமும் விருப்பமும் வந்துள்ளது மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில், ஒளிப்பதிவிற்கான படிப்பை முடித்த பிறகு, பல டிவி விளம்பரங்களை இயக்கினார். ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரத்தை இயக்கும் போதுதான், திலீப் என்கிற ஏ.ஆர்.ரஹ்மானின் அறிமுகம் கிடைத்தது.
card 2
ஒளிப்பதிவாளர்-இயக்குனர்-நடிகர் ராஜிவ் மேனன்
டிவி விளம்பரங்களில் இருந்து, திரையுலகிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்த பின்னர், பல மொழிகளில், பிரபல இயக்குனர்களுடன் இணைந்தார். ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னத்தின் வலியுறுத்தலில், 'மின்சார கனவு' படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். மணிரத்னத்தின் படங்களில் தொடர்ந்து பணியாற்றிய ராஜிவ், அடுத்ததாக 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இது பல மொழிகளில் வெற்றி அடைந்தது. இதற்கிடையே அவருக்கு நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். ஒளிப்பதிவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ராஜிவ் மேனனை கட்டாயப்படுத்தி, நடிக்க வைத்த பெருமை, இயக்குனர் வெற்றிமாறனையே சேரும். தற்போது வெளியான 'விடுதலை' திரைப்படத்தில், ஒரு எலைட் தலைமை செயலாளர் கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் ராஜிவ் மேனன். அவர் மேலும் பல வெற்றி படங்களில் நடிக்க, இயக்க வாழ்த்துக்கள்!