
Money Heist ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி! 'பெர்லின்' சீரிஸ் 2023 டிசம்பர் மாதம் வெளியாகும்
செய்தி முன்னோட்டம்
பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸில் வெளியான 'Money Heist' தொடர், உலகம் முழுவதும் பல ரசிகர்களை பெற்றுள்ளது.
பெரிய அளவிலான வங்கிக்கொள்ளையைப் பற்றிய ஸ்பானிஷ் தொடர், ஐந்து சீசன்களுக்கு வெற்றிகரமாக வெளியானது.
Money heist சீரிஸில் அதிகமாக விரும்பப்பட்ட பாத்திரமான, ஒரு முக்கிய கதாபாத்திரமான 'பெர்லின்' பற்றிய புதிய தொடரை நெட்பிலிக்ஸ் அறிவித்துள்ளது. கதாநாயகனான Professor-இன் சகோதரன் தான், இந்த பெர்லின்.
இந்தப் புதிய தொடர், இந்த ஆண்டின் இறுதியில், டிசம்பர் மாதம் வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பெர்லின் தொடர் 'Money Heist' தொடரின் முன்கதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை எஸ்தர் மார்டினெஸ் லோபாடோ மற்றும் அலெக்ஸ் பினா எழுதியுள்ளனர். இதற்கான டீசரும் நேற்று வெளியானது.
ட்விட்டர் அஞ்சல்
விரைவில் நெட்ஃபிலிக்ஸில் புதிய தொடர்
BELLA CHILLAO because BERLIN is coming to Netflix this December 🕺💃 pic.twitter.com/P76715wFwD
— Netflix India (@NetflixIndia) February 7, 2023