
விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல்
செய்தி முன்னோட்டம்
விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை, ஓடிடியில் ஒளிபரப்பவிருப்பது அனைவரும் அறிந்ததே.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட திருமண வீடியோ உரிமத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சார்ஸ் தயாரிப்பில், கௌதம்மேனன் இயக்குகிறார்.
எனினும், திருமண வீடியோ குறித்த அறிவிப்பிற்கு பிறகு, எந்த ஒரு அப்டேட்டும் வெளி வராத நிலையில், 'இந்தியா டுடே' வில் குறிப்பிட்டுள்ள எஸ்க்ளுசிவ் தகவல்படி, இன்னும் அந்த திருமண வீடியோவின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வேலைகளும் தெரிவிக்கப்பட்ட நேரத்தில் முடிவடைந்தால், இந்த திருமண வீடியோ வரும் மார்ச் மாத இறுதியிலோ, ஏப்ரல் மாதத்திலோ வெளிவரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
விக்கி- நயன் திருமண வீடியோ
#LadySuperStar #Nayanthara : Wedding Documentary #BeyondtheFairytale is coming soon to Netflix ❤️ pic.twitter.com/E1COrTk1GL
— NayantharaLive - FC (@NayantharaLive) August 23, 2022