72 ஆண்டுகாலத்தில் முதல்முறையாக தேசியத் திரைப்பட விருது விழா டெல்லியில் நடைபெற போவதில்லை; எங்கு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
இந்தியத் திரைப்படத்துறையின் மிக உயரிய கவுரவமாக கருதப்படும் தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, பல தசாப்த கால பாரம்பரியத்தை உடைத்து முதன்முறையாக டெல்லிக்கு வெளியே குஜராத்தில் நடைபெறவுள்ளது. குஜராத்தின் ஏக்தா நகரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான ஒற்றுமையின் சிலை வளாகத்தில் இந்த 72-வது விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. வழக்கமாக புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த விழா, இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் குஜராத் பயணத்தின் போது ஏகதா நகரில் நடத்தப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் நேரில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பிக்கவுள்ளார். இந்தியச் சினிமா வரலாற்றில் டெல்லிக்கு வெளியே தேசிய திரைப்பட விருது விழா நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
வெற்றியாளர்கள்
72-வது விருதுகளின் வெற்றியாளர்கள்
கடந்த ஜூலை மாதம் புதுடெல்லியில் அறிவிக்கப்பட்ட இந்த 72-வது தேசியத் திரைப்பட விருதுகளில், 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் அங்கீகரிக்கப்பட்டன:
சிறந்த திரைப்படம்: ஆர்ட்டிக்கிள் 370.
சிறந்த நடிகர் (கூட்டு விருது): மம்மூட்டி மற்றும் கார்த்திக் ஆர்யன்.
சிறந்த நடிகை: யாமி கௌதம் (ஆர்ட்டிக்கிள் 370).
சிறந்த இயக்குனர் (சிறப்புப் பிரிவு): ஆனந்த் எல். ராய் (ஒற்றுமையின் சிலை தொடர்பான ஆவணப் படத்திற்காக).
ஒற்றுமையின் சிலை அமைந்துள்ள ஏகதா நகரில் இவ்விழாவை நடத்துவது, இந்தியாவின் கலாச்சார மற்றும் கலை அடையாளங்களை டெல்லிக்கு அப்பால் உள்ள மாநிலங்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் குஜராத் மாநிலத்தின் கலை மற்றும் சுற்றுலாத் துறை சர்வதேச அளவில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.