'அயலான்' திரைப்படத்தின் 2வது லிரிக்கல் வீடியோ பாடல் வெளியானது
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சயின்ஸ் பிக்க்ஷன் படமாக, 2 ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்புகள் நிறைவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து இப்படத்தின் 'அயலா அயலா' என்னும் 2வது லிரிக்கல் வீடியோ பாடலை இன்று(டிச.,20) இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலின் லிரிக்ஸ் விவேக் எழுதியுள்ள நிலையில், நரேஷ் ஐயர், ஹிருதி கட்டானி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.