Page Loader
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

எழுதியவர் Nivetha P
Oct 10, 2023
06:42 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வெற்றிப்பெற்றவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இசையமைப்பாளராக தனது 100வது படத்தினை எட்டவுள்ளார். அதேபோல் நடிகராகவும் தனது 25வது படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது. இப்படத்தினை அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் என்பவர் இயக்கவுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷே இப்படத்தினை தயாரிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேண்டஸி ஜார்னரில் எடுக்கப்படவுள்ள இப்படத்தில் நாயகியாக நடிகை திவ்ய பாரதி நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே, 'பேச்சுலர்' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், 'கிங்ஸ்டன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை கமல்ஹாசன் இணையத்தில் அண்மையில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

டைட்டில் போஸ்டர்