அடுத்த செய்திக் கட்டுரை

21 Years of Gemini: 'ஓ போடு' நாஸ்டால்ஜியா, விக்ரமின் ஸ்பெஷல் பதிவு
எழுதியவர்
Venkatalakshmi V
Apr 12, 2023
06:48 pm
செய்தி முன்னோட்டம்
நடிகர் விக்ரம் நடிப்பில், சரண் இயக்கத்தில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'ஜெமினி'.
அந்த படத்தில் வரும் 'ஓ போடு' பாடலும், விக்ரமின் ஸ்டைலான போஸும் இன்றும் பிரபலம். விக்ரமின் சினிமா வாழ்க்கையில், அவரை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது ஜெமினி தான்.
இந்த படத்தின் மூலக்கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என சரண் ஒரு நேர்காணலின் போது குறிப்பிட்டுருந்தார்.
இந்த படத்தை, AVM நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசை பரத்வாஜ். அவரின் இசையில் வெளியான படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்தன.
இந்த படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் வெளியானதை ஒட்டி, விக்ரம் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
21 years of Gemini
21 years of Gemini. 🤩 #opodu pic.twitter.com/5D7sy49hnc
— Vikram (@chiyaan) April 12, 2023