
கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா?- லோகேஷ் கனகராஜிடம் கேட்ட விஜய்
செய்தி முன்னோட்டம்
கடந்த 5 ஆம் தேதி வெளியான லியோ ட்ரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது சர்ச்சைக்குள்ளானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா ஆகியோர் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக அத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இருந்த போதும் அந்த ட்ரெய்லரில் நடிகர் விஜய் பேசி இருந்த ஆபாச வார்த்தை சர்ச்சைக்குள்ளானது. மேலும் அந்த வசனத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது பேசியுள்ளார்.
2nd card
படத்திற்கு அந்த வார்த்தை தேவைப்பட்டது- லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, " படத்திற்கு தேவைப்பட்டதால் தான் அந்த வசனத்தை அவர் பேசியுள்ளார்". "அப்பாவியாக இருக்கும் ஒருவர் தான் இருக்கும் அழுத்தமான மனநிலையில் பேசியதை நான் காட்சி படுத்தி இருக்கிறேன்". "நடிகர் விஜய்க்கும் அந்த வார்த்தைக்கும் எந்த தொடர்புமில்லை. அந்த வார்த்தையினால் யாராவது மனம் புண்பட்டிருந்தாலோ, கண்டனத்தை தெரிவித்தாலோ அதற்கு நான் தான் முழு பொறுப்பு" "அந்த வார்த்தையை உட்பட ஆறு நிமிட வசனம் ஒரே டேக்காக எடுக்கப்பட்டது. காலையில் படப்பிடிப்பு தொடங்கிய போது அந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் என்னிடம் கேட்டார்". " கதைக்கு தேவைப்படும் என நான் தான் அவரை பேச வைத்தேன்" எனக் கூறியுள்ளார்