LOADING...
'கேப்டன் அமெரிக்கா' நடிகர் ரகசிய திருமணம்
'கேப்டன் அமெரிக்கா' நடிகர் ரகசிய திருமணம்

'கேப்டன் அமெரிக்கா' நடிகர் ரகசிய திருமணம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 11, 2023
12:38 pm

செய்தி முன்னோட்டம்

மார்வெல் தொடரின் ஒரு நாயகனான 'கேப்டன் அமெரிக்கா' கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் கிறிஸ் எவன்ஸ். இவர் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 9) தனது காதலியும், போர்ச்சுகீசிய நடிகையுமான ஆல்பா பாப்டிஸ்ட்டாவை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்விற்கு, மார்வெல் தொடரில், உடன் நடித்தவர்காளான ராபர்ட் டௌனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் ஜெர்மி ரென்னேர் ஆகியோர் கலந்து கொண்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. 2021-இல் சமூக வலைத்தளத்தில் நண்பர்களாக தொடங்கிய இவர்களின் நட்பு, அடுத்த ஆண்டே காதலாக மலர்ந்தது. பின்னர் பொது இடங்களில் தம்பதிகளாக வலம் வந்த இந்த ஜோடி, இந்த ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

'கேப்டன் அமெரிக்கா' நடிகர் ரகசிய திருமணம்