டிவிட்டரில் டிரெண்டாகும் அஜித் - 15 வருடத்தை நிறைவு செய்த அஜித்தின் பில்லா படம்
2007, டிசம்பர் 14ம் தேதி மாஸ் ஆக வெளிந்த படம் தான் அஜீத் நடித்த பில்லா திரைப்படம். இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தொடர் தோல்விகளுக்கு பிறகு பில்லா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆக, 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, நமிதா, பிரபு, சந்தானம் போன்றோர் இணைந்து நடித்து இருந்தனர். இது 1980 இல் கே.பாலாஜியின் இயக்கத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியான பில்லா படத்தை தழுவி சில மாற்றங்களுடன் வெளிவந்த படமாகும். இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டன.
ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக வெளிவந்த அஜித்தின் பில்லா திரைப்படம்
முதலில் நயன்தாரா நடித்த முக்கிய கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகை இஷா ஷர்வானியிடம் பேசப் பட்டு, சில தவிக்க முடியாத காரணத்தால் அவர் இப்படத்திலிருந்து விலகியதாக சொல்லப் படுகிறது. இப்படத்தின் மற்றொரு முக்கிய பெண் கதாப்பாத்திரம் ஸ்ரேயாக்கு எழுத பட்டதாவும், ஆனால் சிவாஜி படத்தின் காரணமாக அவர் படத்தை ஏற்க மறுத்துவிட்டார். அதன் பிறகு த்ரிஷா, ரீமா சென், அசின் மற்றும் பானு, பூஜா உமாசங்கர் போன்ற மற்ற நடிகைகள் பரிசீலிக்கப்பட்டாலும், இறுதியில் நமிதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படம் உலக தமிழருக்காக நிறைய திரையரங்களில் வெளியிடப்பட்டு வசூல் சாதனை பெற்றது. இப்படம் வெளி வந்து 15 வருடங்கள் ஆனாலும் இன்றுவரை கோலிவுட்டின் ஸ்டைலிஷ் படம் இதுதான்.