Page Loader
சுத்த சைவ உணவுகளை டெலிவரி செய்ய புது வசதியை அறிமுகப்படுத்தியது சோமாட்டோ

சுத்த சைவ உணவுகளை டெலிவரி செய்ய புது வசதியை அறிமுகப்படுத்தியது சோமாட்டோ

எழுதியவர் Sindhuja SM
Mar 19, 2024
07:16 pm

செய்தி முன்னோட்டம்

சுத்த சைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்காக 'Pure Veg Fleet' உடன் 'Pure Veg Mode'ஐ இன்று அறிமுகப்படுத்தியது சோமாட்டோ. இந்த அம்சம் இந்தியா முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும், "சைவ உணவை மட்டும் உட்கொள்ளும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற கருத்தை மனதில் கொண்டு இந்த அம்சம் தொடங்கப்பட்டது என்று அவர் ட்வீட் செய்துள்ளார். Pure Veg Mode, சுத்தமான சைவ உணவை வழங்கும் உணவகங்களை மட்டுமே பட்டியலிடும் என்றும் அவர் கூறியுள்ளார். கூடுதலாக, இந்த Pure Veg Modeஇல் ஆர்ட்டர் செய்யப்படும் உணவுகள் பச்சை டெலிவரி பெட்டிகளை எடுத்துச் செல்லும் பிரத்யேகமான சோமாட்டோவின் 'Pure Veg Fleet' டெலிவரி ஆட்கள் மூலம் டெலிவரி செய்யப்படும்.

ட்விட்டர் அஞ்சல்

புது வசதியை அறிமுகப்படுத்தியது சோமாட்டோ