வைரல் மின்னஞ்சல் ஒரு 'திட்டமிடப்பட்ட முயற்சி': YesMadam விளக்கம்
கடுமையான எதிர்வினைகளை தொடர்ந்து, செவ்வாயன்று யெஸ்மேடம் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் மனிதவளத் துறையின் மேலாளரிடமிருந்து வெளியானதாக கூறப்பட்ட வைரலான மின்னஞ்சல் ஒரு "திட்டமிட்ட முயற்சி" என்றும், வேலையில் "அழுத்தம்" என்று எந்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யவில்லை எனவும் கூறியது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், டெல்லி-என்சிஆரை தளமாகக் கொண்ட ஹோம் சலூன் சேவை, "யெஸ்மேடம் யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை" என்று கூறியது. மேலும் "சமீபத்திய சமூக ஊடக இடுகைகளால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்" என்று கூறியது.
Twitter Post
பணியாளர்களை வெளியே அனுப்பிய நிறுவனம்
சலூன் ஹோம் சர்வீஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான யெஸ்மேடம், நிறுவனத்தில் மேற்கொண்ட சர்வேயில் கணிசமான மன அழுத்தத்தை வெளிப்படுத்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்பட்ட பின்னர் பரவலான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. நிறுவனத்தின் மனிதவளத் துறையின் மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட் எனக் கூறப்படும் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சை வெடித்தது. அந்த மின்னஞ்சலின் படி, நிறுவனம் தனது ஊழியர்களிடையே பணியிட அழுத்த அளவை அளவிடுவதற்கு சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. இருப்பினும், சர்வேயில் எழுப்பப்பட்ட கவலைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பதாகப் புகாரளித்தவர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்தது. வேலையில் யாரும் மன அழுத்தத்தில் இருக்கக்கூடாது என்பதற்கான முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.