NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / அதானி, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கு எதற்காக அமெரிக்காவில் அரெஸ்ட் வாரென்ட்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதானி, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கு எதற்காக அமெரிக்காவில் அரெஸ்ட் வாரென்ட்?
    இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது

    அதானி, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கு எதற்காக அமெரிக்காவில் அரெஸ்ட் வாரென்ட்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 21, 2024
    03:10 pm

    செய்தி முன்னோட்டம்

    சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி மற்றும் 7 பேர் மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக வெளியான செய்தியில், அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் சிலருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கூற்றுப்படி, இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சூரிய சக்தி திட்டத்திற்காக அதானி குழுமம் பில்லியன்களை திரட்டிய அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து இந்த உண்மை மறைக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறினர்.

    அதானி குழுமம் எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதன் மூலம் $2 பில்லியன் லாபம் ஈட்டலாம் என்று நம்புகிறது எனவும் கூறப்படுகிறது.

    முதலீட்டாளர்கள்

    இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, அமெரிக்காவிற்கு என்ன பாதிப்பு?

    லஞ்சக் குற்றச்சாட்டுகள் இந்திய அதிகாரிகளுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்க முதலீட்டாளர்கள் அல்லது சந்தைகள் சம்பந்தப்பட்டிருந்தால் ஊழல் வழக்குகளைத் தொடர அமெரிக்க சட்டம் அனுமதிக்கிறது.

    இந்த குற்றசாட்டிற்கு, அதானி குழுமம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் கூறியுள்ளது.

    அதானி குழுமம் பங்குக் கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றம் சாட்டிய ஒரு வருடத்திற்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இது அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் $150 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியது.

    வழக்கு

    கௌதம் அதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கு என்ன?

    அமெரிக்க குற்றச்சாட்டின்படி, கௌதம் அதானியின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. மாறாக அவர் ஒரு "இந்திய எரிசக்தி நிறுவனத்தின்" நிறுவனர் மற்றும் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நபர் சர்ச்சையின் மையமாக உள்ளார்.

    எரிசக்தி நிறுவனத்தின்(அதானி கிரீன் எனர்ஜி) நிர்வாக இயக்குநராக சாகர் அதானி குறிப்பிடப்பட்டுள்ளார். Azure Power இன் CEO ஆக இருந்த ரஞ்சித் குப்தா மற்றும் Azure Power இன் ஆலோசகர் மற்றும் CEO ரூபேஷ் அகர்வால் ஆகியோர் "US Issuer" இல் பணிபுரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    "இந்திய எரிசக்தி நிறுவனம்" மற்றும் "அமெரிக்க வழங்குநர்" ஆகியவை 12 ஜிகாவாட் சூரிய சக்தியை அரசுக்குச் சொந்தமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு (SECI) வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

    லஞ்சம்

    இந்திய அதிகாரிகளுக்கு ஒப்பந்தத்தை பெற லஞ்சம் வழங்கப்பட்டது

    இருப்பினும், சூரிய சக்தியை வாங்குவதற்கு இந்தியாவில் 'பையர்ஸ்-ஐ SECI கண்டுபிடிக்க முடியவில்லை.

    எரி சக்தியை வங்க ஆள் இல்லையென்றால், ஒப்பந்தம் முன்னேற முடியாது, மேலும் இரு நிறுவனங்களும் எதிர்பார்த்த லாபத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

    அப்போதுதான் அதானி குழுமமும், அஸூர் பவர் நிறுவனமும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கும் திட்டத்தை திட்டியதாக அமெரிக்கா வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

    பதிலுக்கு, அரசு அதிகாரிகள் மாநில மின்சார விநியோக நிறுவனங்களை SECI உடன் மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வற்புறுத்துவார்கள்.

    இதற்காக அவர்கள் சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் தருவதாக உறுதியளித்தனர், இதில் பெரும்பகுதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அதிகாரிகளைக்கு தரப்பட்டது.

    குறியீடு

    குறியீட்டு பெயர்களால் ஒப்பந்தம்

    இதைத் தொடர்ந்து, சில மாநில மின் நிறுவனங்கள், இரு நிறுவனங்களிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் வாங்க, எஸ்இசிஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டன.

    "இந்திய எரிசக்தி நிறுவனமும் அமெரிக்க வழங்குநரும் லஞ்சப் பணத்தைப் பிரிப்பதில் நெருக்கமாக பணியாற்றினர்" என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது.

    அமெரிக்க வழக்கறிஞர்கள் மேலும் கூறுகையில், தங்கள் ஈடுபாட்டை மறைக்க, சதிகாரர்கள் குறியீட்டு பெயர்களைப் பயன்படுத்தினர்.

    உதாரணமாக, கௌதம் அதானி "நுமெரோ யூனோ" அல்லது "தி பிக் மேன்" என்று அழைக்கப்பட்டார். தகவல் தொடர்பு மறைகுறியாக்கப்பட்ட செய்தி வழியாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தலைமை

    தலைமை மாறியதும் ஆட்டம் கண்ட ஒப்பந்த திட்டம்

    இருப்பினும், "அமெரிக்க வழங்குநரின்" தலைமை மாற்றங்கள் ஒரு இந்த திட்டத்தினை சற்றே அசைத்து பார்த்தது. ரஞ்சித் குப்தா 2019-2022 வரை Azure Power இன் CEO ஆக பணியாற்றினார்.

    பின்னர் 2022-2023 வரை, ரூபேஷ் அகர்வால் பொறுப்பேற்றார்.

    அப்போது இந்த திட்டத்தில் ஈடுபட்ட சில நிர்வாகிகள் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

    வாக்களிக்கப்பட்ட லஞ்சத்தை வெளிப்படையாக இல்லாமல் எப்படி பகிர்வது என்பது குறித்தும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    திட்டத்தின் ஷேர்ஸ்களை மாற்றுவது அல்லது கட்டணங்களை மறைத்து வைப்பது ஆகியவை விருப்ப தேர்வுகளில் அடங்கும்.

    ஆனால், அதானி குழுமம், மின் கொள்முதல் ஒப்பந்தங்களை (பிபிஏக்கள்) பெறுவதற்கு ஈடாக லஞ்சம் தருவதாக ஏற்கனவே உறுதியளித்ததை அமெரிக்க வழங்குநரின் இயக்குநர்கள் குழுவிடம் இருந்து மறைத்தது தான் தற்போது வழக்காக மாறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதானி

    சமீபத்திய

    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா

    அதானி

    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள் பங்குச் சந்தை
    ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு பங்குச் சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025