முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி! ஒரே நாளில் சரிந்த இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள்; என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை பங்குச்சந்தையில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை (IT) பங்குகள் கடும் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன. இன்போசிஸ், டிசிஎஸ் (TCS) மற்றும் விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்தன. நிஃப்டி ஐடி குறியீடு (Nifty IT Index) பெரும் சரிவை சந்தித்தது, ஒட்டுமொத்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகளையும் கீழே இழுத்தது.
காரணங்கள்
வீழ்ச்சிக்கான 3 முக்கிய காரணங்கள்
1. அமெரிக்க பொருளாதார தரவுகள்: அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த தரவுகள் வலுவாக வெளியாகியுள்ளன. இது வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு அதிகமாகவே இருக்கும் என்ற அச்சத்தை முதலீட்டாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 2. ஏஐ(AI): ஆந்த்ரோபிக் போன்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு(AI) துறையில் வேகமாக முன்னேறி வருகின்றன. மென்பொருள் பராமரிப்பு, கோடிங் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற பணிகளை ஏஐ கருவிகளே செய்துவிடும் பட்சத்தில், இந்திய ஐடி நிறுவனங்களின் பாரம்பரிய Labour Model பாதிக்கப்படலாம் என்ற கவலை மீண்டும் எழுந்துள்ளது. 3. ADR வீழ்ச்சி: அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய ஐடி நிறுவனங்களின் ADR பங்குகள் முன்னதாகவே பெரும் சரிவை சந்தித்தன. இது இன்று இந்தியச் சந்தையில் எதிரொலித்தது.