பட்ஜெட் 2024: இந்திய தொழில்நுட்பத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு அதிநவீன AI மற்றும் பிற திறன்களைக் கொண்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொறியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று ஒரு தொழில் குழு தெரிவித்துள்ளது. எனவே, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவில் கல்வி மற்றும் பயிற்சிக்கான அரசு நிதியில் பெரும் அதிகரிப்பு இருக்க வேண்டும். பிற நாட்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதிக அளவில் பணியாளர்கள் உள்ளனர். ஆனால், தகுதியுள்ள பணியாளர்களை வேளைக்கு எடுப்பது என்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற துறைகளில் பணியிடங்களை நிரப்ப தகுதியான பொறியாளர்கள் தேவைப்படுவார்கள்.
250 பில்லியன் டாலர் தொழில்நுட்பத் துறை
தொழில்நுட்பத் துறை அதன் தற்போதைய ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு புதிய திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டி இருக்கும். மேலும், புதிய திறன்களை ஊழியர்களுக்கு கற்று கொடுத்தாலும் அதை கற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும் என்பது இதை மிகவும் சவாலானதாக ஆக்குகிறது. எனவே, இந்த முக்கியமான துறையை ஆதரிக்க அரசாங்கம் கணிசமான முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவின் 250 பில்லியன் டாலர் தொழில்நுட்பத் துறை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் துறையில் சுமார் 5.4 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். நாட்டின் $3 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்நுட்ப சேவைகள் சுமார் 7.5 சதவீதம் ஆகும். இந்த துறையில் வேலைவாய்ப்புகள் 2028இல் 25 சதவீதத்திலிருந்து 2029இல் 29 சதவீதமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.