
முதல் காலாண்டில் லாபத்தைப் பதிவு செய்த இன்டிகோ, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் CEO
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 316 விமானங்களுடன் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இன்டிகோவின் சேவையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதையடுத்து, அந்ந நிறுவனத்தின் மீது விசாரணை மேற்கொண்டிருக்கிறது பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA).
இன்டிகோவின் விமானங்களில் ஒன்று A-321 விமானமானத்தின் பின்பகுதியானது புறப்பாடின் போது, தரையிறங்கும் போது ஓடுதளத்தில் உரசியிருக்கிறது. 'டெயில் ஸ்ட்ரைக்' எனக் குறிப்பிடப்படும் இந்த சம்பவமானது கடந்த ஆறு மாதங்களில் நான்கு முறை A-321 விமானத்தினால் நிகழ்ந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மீது ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது டிஜிசிஏ அமைப்பு. மேற்கூறிய பாதுகாப்புக் குறைபாடு சம்பவங்கள் தொடர்பாக இன்டிகோ நிறுவனம் அளித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லாததையடுத்து, அந்நிறுவனத்தின் மீது அபராதம் விதித்தது டிஜிசிஏ.
இன்டிகோ
இன்டிகோவின் தலைமை செயல் அதிகாரி கூறுவது என்ன?
இச்சம்பவங்கள் குறித்து செய்தி நிறுவனத்துடனான பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிய்டர் எல்பர்ஸ்.
அந்தப் பேட்டியில், டிஜிசிஏவின் விசாரணைகள் முடிந்தவுடன், மேற்கூறிய சம்பவங்கள் அடுத்து நடைபெறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும், எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பாதுகாப்பிற்கே தாங்கள் அதிகம் முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், அது ஒருமுறை செயல்பாடு அல்ல, தொடர்ச்சியான செயல்பாடு எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே தங்களுடைய முதல் காலாண்டு முடிவுகளையும் அந்நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கிறது. கடந்த நிதியாண்டு ஜூன் காலாண்டில் ரூ.1,064 கோடி நஷ்டத்தைப் பதிவு செய்திருந்த அந்நிறுவனம், தற்போது ரூ.3,090 கோடி லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது.