NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / நூற்றுக்கணக்கானோரை வேலையிலிருந்து நீக்கவுள்ளது வால்மார்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நூற்றுக்கணக்கானோரை வேலையிலிருந்து நீக்கவுள்ளது வால்மார்ட்
    பெரும்பாலான ரிமோட் தொழிலாளர்களை அலுவலகங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறது வால்மார்ட்

    நூற்றுக்கணக்கானோரை வேலையிலிருந்து நீக்கவுள்ளது வால்மார்ட்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 14, 2024
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல வர்த்தக நிறுவனமான வால்மார்ட், நூற்றுக்கணக்கான கார்பரேட் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு, பெரும்பாலான ரிமோட் தொழிலாளர்களை அலுவலகங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையில், டல்லாஸ், அட்லாண்டா மற்றும் டொராண்டோவில் உள்ள அமெரிக்க சில்லறை வர்த்தக நிறுவனங்களின் சிறிய அலுவலகங்களில் உள்ள தொழிலாளர்கள், பென்டன்வில்லில் உள்ள வால்மார்ட்டின் கார்பரேட் தலைமையகம் மற்றும் ஹோபோகென் அல்லது சதர்ன் சி போன்ற பிற மைய மையங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிக்கை மேலும் கூறியது.

    பெரும்பாலான நேரங்களில் அலுவலகங்களில் இருந்து பணிபுரியும் வரை, வால்மார்ட், ஊழியர்களை பார்ட்-டைம் ரிமோட் வசதியை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.

    embed

    வால்மார்ட்

    #Walmart is cutting hundreds of corporate jobs and asking most remote workers to move to offices, the Wall Street Journal reported on Monday, citing people familiar with the matter. #layoffs2024 https://t.co/0VMkyBQzpk— Mint (@livemint) May 14, 2024

    பணிநீக்கம் 

    2026 நிதியாண்டின் இறுதிக்குள் வால்மார்டின் 65% கடைகள் ஆட்டோமேஷன்

    வால்மார்ட் ஜனவரி 31, 2024 வரை, ஒழுங்குமுறை ஆவணங்களின்படி தோராயமாக 2.1 மில்லியன் பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது.

    அதே நேரத்தில் வால்மார்ட் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் தனது பணியாளர்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும் கடந்த ஆண்டு ஏப்ரலில், 2026 நிதியாண்டின் இறுதிக்குள் அதன் 65% கடைகள் ஆட்டோமேஷன் மூலம் சேவை செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறது.

    பிப்ரவரி 2023இல், அது தனது மூன்று அமெரிக்க தொழில்நுட்ப மையங்களை மூடிவிட்டு, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை தங்கள் வேலையைத் தக்கவைக்க இடமாற்றம் செய்யச் சொன்னது.

    அதனால் அதிகமான ஊழியர்களை அலுவலகத்தில் இருந்து வேலை செய்யத்தூண்டியது.

    இந்த அறிக்கைக்கு, வால்மார்ட் தரப்பிலிருந்து உடனடியாக பதிலில்லை என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    பணி நீக்கம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    அமெரிக்கா

    இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை காசா
    இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல் இஸ்ரேல்
    240 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நிலநடுக்கம் நிலநடுக்கம்
    AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவு

    பணி நீக்கம்

    ஜனவரி 2024இல் மட்டுமே 7,500 பணியாளர்களை நீக்கிய IT நிறுவனங்கள்: பணிநீக்கம் தொடரும் என எச்சரித்த சுந்தர் பிச்சை கூகுள்
    சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம் சேலம்
    தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் பைஜுவின் பணிநீக்கங்கள் பைஜுஸ்
    கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஆட்குறைப்பில் இறங்கிய அமேசான்  அமேசான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025