
10% விமானங்களை ரத்து செய்தது விஸ்தாரா விமான நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
விமான பணியாளர்கள் கிடைக்காததால் விஸ்தாரா விமான நிறுவனம் ஒரு நாளைக்கு 25-30 விமானங்கள் வரை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
விஸ்தாரா விமான நிறுவனம் சராசரியாக தினமும் சுமார் 350 விமானங்களை இயக்கி வந்தது.
விஸ்தாரா விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் விமான கட்டண உயர்வு ஏற்படும் என்றும், குறிப்பாக மெட்ரோ வழித்தடங்களில் கட்டணங்கள் அதிகமாக உயரும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி-மும்பை வழித்தடத்தில் மட்டும் விஸ்தாரா ஒரு நாளைக்கு சுமார் 18 விமானங்களை இயக்கி வருகிறது. அதற்கு அடுத்தபடியாக இண்டிகோ நிறுவனம் 19 விமானங்களை இயக்கி வருகிறது.
எனவே, அந்த வாழைத்தடத்தில் விமான கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
விஸ்தாரா
வளர்ந்து வந்த விஸ்தாரா நிறுவனம்
விஸ்தாரா பிப்ரவரியில் 9.9% உள்நாட்டு சந்தைப் பங்குடன் 12.55 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றிருக்கிறது.
சர்வதேச விமானங்களில், விஸ்தாரா விமான நிறுவனம் 2.32 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றிருக்கிறது.
பிப்ரவரியில் சராசரியாக 49 சர்வதேச விமானங்களையும் 273 உள்நாட்டு விமானங்களையும் விஸ்தாரா பயன்படுத்தியுள்ளது.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் கடந்த மாதத்தில் மும்பையில் இருந்து பாரிஸ்,பெங்களூரு - அகமதாபாத், பெங்களூரு - கொல்கத்தா, பெங்களூரு - டேராடூன், பெங்களூரு - கொச்சி, பெங்களூரு - உதய்பூர், அகமதாபாத் - கோவா மற்றும் பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் பல விமானங்களை அறிமுகப்படுத்தியது.
2324 வாராந்திர உள்நாட்டு விமானங்கள் அல்லது சராசரியாக 334 தினசரி விமானங்களுக்கு விஸ்தாரா விமான நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.