LOADING...
டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி! 130 பில்லியன் டாலர் அபராதத்தை வட்டியோடு திருப்பித் தர அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
டிரம்ப் அரசு வசூலித்த 130 பில்லியன் டாலர் வரியை வட்டியுடன் திருப்பித் தருமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி! 130 பில்லியன் டாலர் அபராதத்தை வட்டியோடு திருப்பித் தர அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 05, 2026
12:14 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி சட்டவிரோதமானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த வரிகள் மூலம் வசூலிக்கப்பட்ட சுமார் 130 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 10.8 லட்சம் கோடி ரூபாய்) தொகையை, சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களுக்கு வட்டியுடன் திருப்பித் தருமாறு மேன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

உத்தரவு

நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்ட் ஈடன், "சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை இந்தத் தொகையைத் திருப்பித் தருவதற்கான வழிமுறைகளை உடனடியாக இறுதி செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட பணத்தை வெறும் அசலாக மட்டும் தராமல், அதற்கான வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். "சுங்கத் துறைக்கு இது ஒன்றும் புதிய வேலை அல்ல, அவர்கள் தினமும் பணத்தைத் திரும்பத் தரும் பணிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று நீதிபதி ஈடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாதம்

சுங்கத் துறையின் வாதம்

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தங்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. சுமார் 7 கோடிக்கும் அதிகமான இறக்குமதி பதிவுகளை ஒவ்வொன்றாகச் சரிபார்த்துப் பணத்தைத் திருப்பித் தருவது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு கடினமான பணி என்று அந்தத் துறை வாதிட்டுள்ளது. இந்தத் தொகையைத் திருப்பித் தருவதற்கான முறையான திட்டத்தை வகுக்கத் தங்களுக்குக் குறைந்தது நான்கு மாத கால அவகாசம் தேவை என்று அவர்கள் கோரியுள்ளனர்.

Advertisement

வெற்றி

சிறு வணிகர்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி

இந்த வரி விதிப்பால் சுமார் 3 லட்சம் இறக்குமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறிய அளவிலான வணிகம் செய்பவர்கள். 'அட்மஸ் ஃபில்டரேஷன்' என்ற நிறுவனம் சுமார் 1.1 கோடி டாலர் வரியைச் சட்டவிரோதமாகச் செலுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. பணத்தைத் திரும்பப் பெறுவதற்குச் சிக்கலான சட்ட நடைமுறைகள் இல்லாமல், எளிமையான முறையைப் பின்பற்ற வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், சிறு நிறுவனங்கள் தங்களது ரீஃபண்ட் தொகையை இழக்க நேரிடும் என்று வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Advertisement