Loading...
அக்டோபர் 15 முதல் UPI கட்டணத்தில் மாற்றம்: UPI, கிரெடிட் கார்டு & நெட் பேங்கிங் - எதில் கட்டணம் குறைவு?
அக்டோபர் 15 முதல் UPI கட்டணத்தில் மாற்றம்

அக்டோபர் 15 முதல் UPI கட்டணத்தில் மாற்றம்: UPI, கிரெடிட் கார்டு & நெட் பேங்கிங் - எதில் கட்டணம் குறைவு?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
01:30 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிக ரீதியிலான யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை புதிய மெர்ச்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட் (MDR) கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இருப்பினும், இந்த கட்டணத்தால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு கூடுதல் செலவும் இருக்காது என்பதில் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஏனெனில், இந்த MDR கட்டணம் வணிகர்கள் செலுத்துவதாகும்; இதனை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கும் வணிகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டணக் கணக்கீடு

புதிய UPI MDR கட்டணக் கணக்கீடு எப்படி இருக்கும்?

ரூ. 2,000 வரை: 0% (கட்டணம் இல்லை)

ரூ. 5,00: 0.4% (ரூ. 20)

ரூ. 50,000: 0.4% (ரூ. 200)

ரூ. 75,000 மற்றும் அதற்கு மேல்: 0.4% (அதிகபட்ச வரம்பு ரூ. 300)

இவை எதற்குமே வாடிக்கையாளர் பணம் செலுத்த தேவையில்லை, மாறாக வணிகர்கள் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

(குறிப்பு: ரயில்வே, டெலிகாம், இன்சூரன்ஸ், எரிபொருள் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கு ரூ.2,000-க்கு மேல் ரூ.5 என்ற நிலையான கட்டணமே வசூலிக்கப்படும்).

ஒப்பீடு

UPI, கிரெடிட் கார்டு & நெட் பேங்கிங் - எதில் கட்டணம் குறைவு?

UPI (யுபிஐ): வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனைக் கட்டணம் முற்றிலும் இலவசம். பயன்பாட்டு செயலி நிறுவனங்களும் மறைமுகக் கட்டணங்களை வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு (Credit Card): வணிகர்கள் 1.5% முதல் 2.5% வரை MDR செலுத்துகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு நேரடிக் கட்டணம் இல்லை என்றாலும், குறித்த காலத்தில் பில் செலுத்தத் தவறினால் வட்டி மற்றும் கூடுதல் அபராதக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

நெட் பேங்கிங் (Net Banking): ஆன்லைன் NEFT பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், சில வணிகத் தளங்கள் நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தும் போது சிறிய சேவைக் கட்டணத்தைச் சேர்க்கக்கூடும்.

ADVERTISEMENT