Page Loader
பட்ஜெட் 2024: பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் 

பட்ஜெட் 2024: பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் 

எழுதியவர் Sindhuja SM
Jul 23, 2024
05:52 pm

செய்தி முன்னோட்டம்

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024-ன் போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. "இது பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது," என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவாக கூறினார். பெண்கள் சார்ந்த திறன் திட்டங்களை ஒழுங்கமைத்தல் மற்றும் சுய உதவிக் குழு (SHG) நிறுவனங்களில் பெண்களுக்கான சந்தை அணுகலை ஊக்குவித்தல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். கடந்த இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கிய பிரிவினர்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாக நிதியமைச்சர் தனது உரையின் போது கூறினார்.

இந்தியா

பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளை அமைக்க உள்ளது மத்திய அரசு 

"மதம், சாதி, பாலினம் மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைவரும் தங்கள் வாழ்க்கை இலக்குகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார். எனவே, பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளை நாடு முழுவதும் அமைப்பதன் மூலமும், குழந்தைகள் காப்பகங்களை நிறுவுவதன் மூலமும், பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது மத்திய அரசு. கூடுதலாக, பெண்கள் சார்ந்த திறன் வளர்ப்பு திட்டங்களை ஒழுங்கமைக்கவும், பெண்களின் SHG நிறுவனங்களுக்கான சந்தை அணுகலை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. கைவினைஞர்கள், சுய உதவிக்குழுக்கள், எஸ்சி/எஸ்டி, பெண் தொழில்முனைவோர் மற்றும் தெருவோர வியாபாரிகளின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களை மத்திய அரசு தீவிரப்படுத்த உள்ளது.