
அலுவலகம் செல்பவர்களுக்காக விரைவில் ஊபர் பஸ் சேவை
செய்தி முன்னோட்டம்
கார் மற்றும் ஆட்டோ போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் ஊபர், விரைவில் பேருந்து சேவைகளை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா நாட்டின் சான் பிரான்சிஸ்கோ பகுதியினை தனது தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஊபர் நிறுவனம், இந்தியாவிலும் தனது போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது.
இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனம் ஐடி'யில் பணிபுரிவோர், தொழிற்சாலை செல்வோர், அலுவலகம் செல்வோர் ஆகியோர் வசதியினை கருத்தில் கொண்டு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
இதன் முன்னோட்டமாக 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 60 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் கொண்டு சோதனை ஓட்டம் துவங்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேருந்து
50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வாய்ப்பு
அதனை தொடர்ந்து, தங்கள் வாடிக்கையாளர்கள் வசதிக்காக வீடு மற்றும் அலுவலகம் இடையே இந்த பேருந்துகளின் அன்றாட சேவை இருக்கும் என்றும் ஊபர் நிறுவனம் கூறியுள்ளது.
இதற்காக ஊபர் நிறுவனம், ஒரு கோடி டாலர்களை கொல்கத்தாவில் முதலீடு செய்துள்ளது.
மேலும் இந்த பேருந்து சேவைகளுக்காக மாநில போக்குவரத்து துறையுடன் இந்த ஊபர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த சேவை துவங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும் என்றும் கூறப்படுகிறது.
வணிக மாவட்டங்களில் இந்த ஊபர் பேருந்து சேவையினை துவக்க திட்டமிடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.