
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு; இன்றைய (ஜூன் 12) விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூன் 12) உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹80 உயர்ந்து ₹9,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ₹640 உயர்ந்து ₹72,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹88 உயர்ந்து ₹9,928 ஆக ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹704 உயர்ந்து, ₹79,424 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சரிவு
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
18 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹65 அதிகரித்து, தற்போது ஒரு கிராமுக்கு ₹7,480 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹520 அதிகரித்து ₹59,840 ஆகவும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை வியாழக்கிழமை நிலவரப்படி 10 காசுகள் குறைந்து ஒரு கிராமுக்கு ₹118.90 ஆகவும், ஒரு கிலோவுக்கு ₹1,18,900 ஆகவும் விற்பனை ஆகிறது.
இதற்கிடையே, தங்கத்தின் விலையில் நீடிக்கும் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.