Page Loader
உணவகங்களின் விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தும் வகையில் புதிய கருவியை அறிமுகப்படுத்திய ஸ்விக்கி
உணவகங்களின் விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தும் வகையில் புதிய கருவியை அறிமுகப்படுத்திய ஸ்விக்கி

உணவகங்களின் விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தும் வகையில் புதிய கருவியை அறிமுகப்படுத்திய ஸ்விக்கி

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 17, 2023
05:09 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனமாக விளங்கி வரும் ஸ்விக்கி, தங்களுடைய பங்குதாரர்களான உணவகங்கள் பயன்படுத்தும் வகையில், 'Network Expansion Insight' என்ற புதிய கருவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. புதிய கிளைகளைத் தொடங்க விரும்பும் உணவகங்கள், ஸ்விக்கியின் இந்தக் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம், தங்களது புதிய கிளையைத் தொடங்குவதற்கான சிறப்பான இடத்தைத் தேர்வு செய்ய முடியும் எனத் தெரிவித்திருக்கிறது ஸ்விக்கி. ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட தங்களுடைய பங்குதாரர் உணவகங்கள், இந்தக் கருவியின் மூலம் புதிய கிளையைத் தொடங்கி வெற்றி கண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது ஸ்விக்கி நிறுவனம்.

ஸ்விக்கி

இந்தக் கருவியினால் என்ன பயன்? 

ஒரு உணவகம் தங்களுடைய புதிய கிளை ஒன்றைக் குறிப்பிட்ட இடத்தில் தொடங்க விரும்புகிறதென்று வைத்துக் கொள்வோம். ஸ்விக்கியின் இந்தப் புதிய கருவியில், தாங்கள் என்ன விதமான உணவுகளை வழங்குகிறோம், எந்த விலையில் வழங்குகிறோம், எந்த இடத்தில் புதிய கிளையைத் திறக்க விரும்புகிறோம் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்தால் போதும். தங்களது தகவல் தளத்தில், எந்த இடத்தில் குறிப்பிட்ட விலையில், குறிப்பிட்ட வகையிலான உணவுகளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதனை ஆராய்ந்து அந்த முடிவுகளை உணவகங்களுக்கு வழங்கும். இதன் மூலம் தங்கள் பங்குதாரர் உணவகங்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதோடு, அதன் வெற்றி வாய்ப்பினையும் அதிகரிக்க உதவுவதாகத் தெரிவித்திருக்கிறது ஸ்விக்கி.