
பட்ஜெட் 2024: சாதகமான நிலையில் தொடங்கியது பங்குச்சந்தை
செய்தி முன்னோட்டம்
பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று நேர்மறையான குறிப்பில் திறக்கப்பட்டன. ஆனால் ஏற்ற இறக்கம் அதிகமாகவே உள்ளது.
காலை 9:15 மணியளவில் S&P BSE சென்செக்ஸ் 0.28% உயர்ந்து 80,724.3 ஆகவும், NSE நிஃப்டி50 0.24% உயர்ந்து 24,568.9 ஆகவும் இருந்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைக்கு முன்னதாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சாதகமான நிலையில் தொடங்கியுள்ளன. ஆனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர்.
மூலதன ஆதாய வரி மற்றும் தனிநபர் வருமான வரி ஆகியவற்றில் நிர்மலா சீதாராமன் ஏதேனும் சாதகமான மாற்றங்களைச் செய்கிறாரா என்பதைப் பார்க்க பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தியா
பங்குசந்தையில் இன்று எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்கும்?
ஏதேனும் சாதகமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டால், முழு பங்குச் சந்தையும் ஒரு பெரிய ஏற்றத்தைக் காணும். ஆனால், அத்தகைய அறிவிப்பு எதுவும் இல்லை என்றால், சந்தை சரிவை சந்திக்கும்.
இந்திய பங்குசந்தைகள் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன.
அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் எப்படி இருக்கும் என்பதன் கணிப்புகளின் அடிப்படையில், முதலீட்டாளர்கள் சாதகமான பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் சீதாராமன் பட்ஜெட் உரையை நிகழ்த்த உள்ளார்.
2024 பட்ஜெட்டில் மூலதன ஆதாய வரி மாற்றப்பட்டால் பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்திக்க நேரிடும்.