NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது 

    சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 09, 2024
    10:45 am

    செய்தி முன்னோட்டம்

    பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று தொடர்ந்து சாதனை படைத்தன. ஆரம்ப வர்த்தகத்தில் முதன்முறையாக BSE சென்செக்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க 75,000 புள்ளிகளை தாண்டியது. நிஃப்டி புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளது.

    அதிகமானோர் ஆரம்ப வர்த்தகத்தில் ஐடி பங்குகளை வாங்கியது சந்தைகளின் ஏற்றத்திற்கு அதிக பங்களித்தது.

    30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 381.78 புள்ளிகள் உயர்ந்து இது வரை எட்டாத உயரமான 75,124.28 புள்ளிகளை எட்டியது.

    NSE நிஃப்டி 99 புள்ளிகள் முன்னேறி 22,765.30 என்ற சாதனையை எட்டியது.

    சென்செக்ஸில் இருந்து, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

    சென்செக்ஸ்

    உலக சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் 

    ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை பின்தங்கிய நிலையில் இருந்தன.

    ஆசிய சந்தைகளில், டோக்கியோ மற்றும் ஹாங்காங் சாதகமான நிலப்பரப்பில் வர்த்தகம் செய்தன. சியோல் மற்றும் ஷாங்காய் சந்தைகளில் அதிகமான சரிவு காணப்பட்டது.

    திங்களன்று வால் ஸ்ட்ரீட் ஒரு கலவையான சந்தை ஓட்டத்தில் முடிந்தது.

    அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்(எஃப்ஐஐ) திங்களன்று ரூ.684.68 கோடி மதிப்பிலான பங்குகளை கைப்பற்றியதாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

    உலகளாவிய எண்ணெய் பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.19 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 90.55 அமெரிக்க டாலராக இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்செக்ஸ்

    சமீபத்திய

    ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை இந்திய ராணுவம்
    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா

    சென்செக்ஸ்

    நிஃப்டி மற்றும் சென்செக்ஸில் ஏன் இந்த திடீர் சரிவு? வணிகம்
    இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50  பங்குச் சந்தை
    சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு பங்குச் சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025