வார இறுதி நாளில் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தன இந்திய பங்குச் சந்தைகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளை வாங்குவதன் மூலம் இந்தியாவின் ஈக்விட்டி பெஞ்ச்மார்க்குகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஆரம்ப வர்த்தகத்தில் மீட்சி அடைந்தன. பிஎஸ்இ சென்செக்ஸ் ஆரம்ப வர்த்தகத்தில் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. அதே நேரத்தில் நிஃப்டி முந்தைய அமர்வின் கடுமையான இழப்புகளுக்குப் பிறகு 24,000 புள்ளிகளை மீண்டும் பெற்றது. 30 சென்செக்ஸ் பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா, மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டி, சந்தை மீட்சியை உந்தியது. இருப்பினும், பவர் கிரிட், ஐடிசி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் மாருதி சுஸூகி ஆகியவை அவற்றின் குறைவான செயல்திறன் மூலம் பரந்த சந்தை லாபங்களை மட்டுப்படுத்தியுள்ளன.
வெளிநாட்டு பங்குச் சந்தைகளின் செயல்பாடு
உலகளவில், ஆசிய சந்தைகள் கலவையான போக்குகளை வழங்கின. ஷாங்காய் மற்றும் ஹாங்காங் குறியீடுகள் சாதகமாக வர்த்தகம் செய்ய, சியோல் மற்றும் டோக்கியோ சரிவு கண்டது. வியாழன் அன்று அமெரிக்க சந்தைகள் தேங்க்ஸ் கிவ்விங் காரணத்தால் மூடப்பட்டிருந்தன. இதற்கிடையே, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.14% அதிகரித்து, ஒரு பீப்பாய்க்கு 73.38 அமெரிக்க டாலராக வர்த்தகமானது. வியாழனன்று ₹11,756.25 கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேற்றியதால் சந்தை மீண்டு வந்த போதிலும் நிலைமை தலைகீழாக மாறியது. இது வியாழனன்று கூர்மையான சந்தை வீழ்ச்சிக்கு பங்களித்தது. வியாழனன்று சென்செக்ஸ் 1,190.34 புள்ளிகள் (1.48%) சரிந்தது மற்றும் நிஃப்டி 360.75 புள்ளிகள் (1.49%) சரிந்தது குறிப்பிடத்தக்கது.