ETF வர்த்தகத்தில் அதிரடி மாற்றம்: புதிய விதிகளால் முதலீட்டாளர்களுக்கு லாபமா?
செய்தி முன்னோட்டம்
இந்தியப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி(SEBI), எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளின் (ETF) வர்த்தக விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வரைமுறை செப்டம்பர் 7, 2026 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. பங்குச் சந்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களின் போது, இ.டி.எஃப்-களின் விலை அவற்றின் உண்மையான மதிப்பை ஒட்டி இருப்பதை உறுதி செய்யவே இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அடிப்படை விலை
அடிப்படை விலை நிர்ணயத்தில் மாற்றம்
இதுவரை ETF-களின் அடிப்படை விலை, இரண்டு நாட்களுக்கு முந்தைய(T-2) நிகர சொத்து மதிப்பின்(NAV) அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
புதிய விதிகளின்படி, முந்தைய நாள் வர்த்தகத்தின் கடைசி 30 நிமிடங்களின் சராசரி விலையை(VWAP) அடிப்படையாகக் கொண்டே அன்றைய வர்த்தகத்திற்கான தொடக்க எல்லை நிர்ணயிக்கப்படும்.
சந்தையின் தன்மையைப் பொறுத்து விலை வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
பங்கு மற்றும் கடன் இ.டி.எஃப்-இன் தொடக்க விலை வரம்பு 10 சதவீதமாக இருக்கும். சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப 15 நிமிட இடைவெளியுடன் இது 20% வரை தளர்த்தப்படும்.
தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப் பொறுத்தவரை, சர்வதேச சந்தை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 6% தொடக்க வரம்புடன், அதிகபட்ச வரம்பின்றி 3% படிகளாக தளர்த்தப்படும்.
லிக்விட் இ.டி.எஃப் 5% நிலையான விலை வரம்பில் தொடரும்.
தங்கம் மற்றும் வெள்ளி ETF
தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப்-களுக்கு முன்-வர்த்தக ஏலம்
பங்குகளுக்கு இருப்பது போல, தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப்-களுக்கு வர்த்தக நேரத்திற்கு முன்பே ஆர்டர்களைச் சேகரித்துச் ஒரே விலையில் முடிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வர்த்தகத் தொடக்கத்தில் சரியான சந்தை விலையைக் கண்டறிய முடியும். இந்த மாற்றங்கள் சந்தையின் லிக்விடிட்டியை அதிகரித்து, முறையான விலை நிர்ணயத்திற்கு வழிவகுக்கும்.