Loading...
சவுதி அரேபியா கச்சா எண்ணெய் குழாய் திடீர் மூடல்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?
சவுதி கச்சா எண்ணெய் குழாய் பாதிப்பால் இந்தியாவிற்கு ஏற்படும் சிக்கல்கள்

சவுதி அரேபியா கச்சா எண்ணெய் குழாய் திடீர் மூடல்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2026
03:51 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் மோதலால் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியாவின் மிக முக்கியக் கச்சா எண்ணெய் குழாய் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரியாத் மற்றும் மதினா பிராந்தியங்கள் வழியாக செல்லும் 'கிழக்கு-மேற்கு குழாய்த் தொடர்' (East-West Pipeline) மீது ஈராக்கில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் பொருள் சேதமும் காயங்களும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக எண்ணெய் விநியோகத்தை சவுதி வெளியுறவு அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கச்சா எண்ணெய்

மத்திய கிழக்கு பதற்றமும் பீப்பாய்க்கு $108 ஆக உயர்ந்த பிரெண்ட் கச்சா எண்ணெயும்

ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றிலும் நிலவும் அச்சுறுத்தலைத் தவிர்க்க நாளொன்றுக்கு 50 முதல் 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை செங்கடலுக்குக் கொண்டு செல்ல இந்த சவுதி குழாய்த் தொடரே முதன்மை பாதையாக இருந்தது.

இக்குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் பிரெண்ட் மற்றும் WTI கச்சா எண்ணெய் விலைகள் உடனடியாக 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.

தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $108 டாலரை எட்டியுள்ளது உலகப் பொருளாதாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எழும் புதிய சவால்கள்

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

சவுதி அரேபியாவின் இந்த விநியோகத் தடை நீடித்தால், மாற்றுப் பாதைகள் வழியாகவோ அல்லது வேறு நாடுகளிடம் இருந்தோ அதிக விலைக்கு கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய கட்டாயம் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும்.

இது கப்பல் போக்குவரத்து செலவை அதிகரிப்பதுடன், சுத்திகரிப்பு லாப வரம்பையும் பெருமளவில் பாதிக்கும்.

ADVERTISEMENT

விலை உயர்வு அச்சம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வும் பணவீக்க அச்சமும்

உலக அளவில் கச்சா எண்ணெய் இருப்பு குறைவாக உள்ள சூழலில், இந்த விநியோகத் தடை இந்திய நுகர்வோரையும் நேரடியாகப் பாதிக்கும் அபாயம் உள்ளது.

கச்சா எண்ணெய் கொள்முதல் செலவு அதிகரிக்கும் பட்சத்தில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலையை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகலாம்.

இது போக்குவரத்துச் செலவை அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்விற்கும் வழிவகுக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ADVERTISEMENT

மாற்று வழிகள்

மாற்று எண்ணெய் ஆதாரங்களை நோக்கி நகரும் இந்தியா

சவுதி அரேபியாவின் இந்த விநியோகத் தடையை எதிர்கொள்ள இந்திய நிறுவனங்கள் தங்கள் கொள்முதல் உத்திகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளன.

ஆப்பிரிக்கா மற்றும் பிற சர்வதேசச் சந்தைகளில் இருந்து மாற்று ஆதாரங்களை உடனடியாகப் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமூக நிலை திரும்பினால் மட்டுமே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT