ஹெல்த் அண்ட் க்ளோ நிறுவனத்தை கைப்பற்றிய டிமார்ட்
சென்னையின் பிரபலமான பியூட்டி மற்றும் பர்சனல் கேர் நிறுவனங்களில் ஒன்று Health and Glow. பெங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவமானம், அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஹெல்த் அண்ட் க்ளோ நிறுவனத்தை ராஜன் ரஹேஜா மற்றும் ஹேமேந்திர கோத்தாரி ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். 1997ஆம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது பல கிளைகளுடன், பெங்களூரு, மங்களூரு, புனே, மும்பை, கொச்சின், கொல்கத்தா, போபால், புவனேஷ்வர் மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் 175 கடைகள் உடன் இயங்கி வருகிறது.
சுமார் 750 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஹெல்த் அண்ட் க்ளோ
இந்த அழகு சாதன விற்பனை நிறுவனத்தை, இந்தியாவின் பிரபலமான ரீடைல் விற்பனையாளராக D-Mart நிறுவனம் விலைக்கு வங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சுமார் 750 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஹெல்த் அண்ட் க்ளோ நிறுவனத்தை வங்கியுள்ளாராம், டிமார்ட் பிராண்டின் உரிமையாளரும் பில்லியனருமான ராதாகிஷன் தமனி. இவர் ஏற்கனவே, 2015இல் , Bombay Swadeshi Stores-ஐ சுமார் 42 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி, ராதாகிஷன் தமனி பல முன்னணி நிறுவனங்களில் முக்கிய பங்குதாரராக உள்ளார். தற்போது Health and Glow நிறுவனத்தை வெற்றிகரமாக கையகப்படுத்தியபின், அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.