சம்பளமின்றி வேலை பார்க்கும் முகேஷ் அம்பானியின் வாரிசுகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருக்கும் முகேஷ் அம்பானியின் மூன்று குழந்தைகளுக்கும் சம்பளம் இல்லையாம். இவர்களின் தந்தையான 66 வயதான முகேஷ் அம்பானியும், 2020-21 நிதியாண்டு முதல் நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மூன்று குழந்தைகள்- இரட்டையர்களான ஆகாஷ் மற்றும் இஷா (இருவரும் 31) மற்றும் ஆனந்த் (28 வயது) - இவர்களுக்கு சம்பளமின்றி, வாரியம் மற்றும் கமிட்டி கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான கட்டணம் மட்டுமே வழங்கப்படும் என்று நிறுவனம் ஒரு தீர்மானத்தில் கூறியுள்ளது. அதனுடன் நிறுவனம் ஈட்டிய லாபத்தில் கமிஷன் மட்டுமே பெறுவார்கள். எனினும் அவரது உறவினர்கள் நிகில் மற்றும் ஹிடல் உள்ளிட்ட மற்ற நிர்வாக இயக்குநர்களுக்கு சம்பளம், சலுகைகள் மற்றும் கமிஷன் வழங்கப்படுகிறது.
2029 வரை சம்பளமின்றி வேலை பார்க்கவுள்ள முகேஷ் அம்பானி
வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இந்நிறுவனத்தின் தலைவராக அதலைவராக 2029 வரை தொடர, ஒப்புதல் அளித்தனர். இந்தக் காலக்கட்டத்திலும் சம்பளமின்றி வேலை பார்க்க அவர் முடிவெடுத்து அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்ற மாற்றங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இஷா அம்பானி, ரிலையன்ஸ் ரீடெய்லின் விரிவாக்கத்தில், சில முக்கிய கையகப்படுத்துதல் மற்றும் 'இண்டிபெண்டன்ஸ்' பிராண்டை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் தொடருவார். ஆகாஷ் அம்பானி, ஜியோவில், 5ஜி, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் போன்ற புதிய கால தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்கு அவர் தலைமை தாங்குகிறார். ஆனந்த், ரிலையன்ஸின் எரிசக்தி மற்றும் பொருள் வணிகங்களின் விரிவாக்கம் போன்ற உலகளாவிய செயல்பாடுகளை பார்வையிடுகிறார்.