கேஸ் சிலிண்டர் புக் பண்ண புதிய விதி! கிராமப்புற மக்களுக்கு முன்பதிவு இடைவெளி 25 நாட்களாகக் குறைப்பு
செய்தி முன்னோட்டம்
கிராமப்புறங்களில் வசிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) நுகர்வோருக்கான கேஸ் சிலிண்டர் மறுசுழற்சி முன்பதிவு இடைவெளியை மத்திய அரசு 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நகரம் மற்றும் கிராமப்புறங்கள் ஆகிய இரண்டிலும் இனி ஒரே சீராக 25 நாட்களுக்கு ஒருமுறை எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதி அமலுக்கு வந்துள்ளது.
மத்திய கிழக்கு
மத்திய கிழக்கு மோதலும் விநியோக சீரமைப்பும்
முன்னதாக மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச அளவில் எரிவாயு விநியோகத்தில் பெரும் தேக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் சிலிண்டர் முன்பதிவு இடைவெளி தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது எல்பிஜி விநியோக சூழல் கணிசமாக முன்னேறியுள்ளதாலும், சிலிண்டர் டெலிவரி நிலுவைகள் பெருமளவில் குறைந்துள்ளதாலும் இந்த தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
குழாய் வழி எரிவாயு
குழாய் வழி இயற்கை எரிவாயுவுக்கு மாறும் வர்த்தகத் துறை
இன்னொரு புறம், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களின் ஒட்டுமொத்த விற்பனை 16.1 சதவீதம் வரை சரிந்து 2.42 மில்லியன் டன்களாகக் குறைந்துள்ளது.
வர்த்தகத் துறை மற்றும் உணவகங்களில் ஏற்பட்ட விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, தொழில்துறை மற்றும் வர்த்தகப் பயன்பாட்டாளர்கள் பலர் தற்போது எல்பிஜியிலிருந்து குழாய் வழி இயற்கை எரிவாயுவுக்கு (PNG) மாறி வருகின்றனர்.
இதன் காரணமாக வர்த்தக ரீதியிலான எல்பிஜி பயன்பாடு குறைந்துள்ளதாக துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வர்த்தக சிலிண்டர்
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு
இதனிடையே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.9.50 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2,738ல் இருந்து ரூ.2,747.50 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விலை மாற்றம் உடனடி அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.