
நெற்றிப் பொட்டு இல்லாத விளம்பர மாடல்கள்.. நல்லி சில்க்ஸ் நிறுவனத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தைச் சேர்ந்த நல்லி சில்க்ஸ் நிறுவனமானது தற்போது சமூக வலைத்தளங்களில் தவறான காரங்களுக்காக பேசுபொருளாகியிருக்கிறது. சமீபத்தில் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் வழக்கமான விளம்பரம் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது நல்லி சில்க்ஸ்.
அந்த விளம்பரத்தில் நல்லி சில்க்ஸ் நிறுவனத்தின் சேலையை உடுத்திய பெண் காட்சிப்படுத்தப்பட்டிருந்தார். சேலைக்கான விளம்பரம் என்பதால் அணிகலன்களை அந்த விளம்பரத்தில் அதிகம் பயன்படுத்தப்படவில்லை.
அணிகலன்களைப் போலவே நெற்றிப் பொட்டும் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிபெற்றிருந்த பெண்ணிடம் தவிர்க்கப்பட்டிருந்தது. இந்தியாவில் நெற்றிப் பொட்டு என்பது மிக முக்கியமான விஷயமாக கருதப்படும் ஒன்று.
நவீன ஆடைகளை விட, சேலை போன்ற பாரம்பரிய ஆடைகளை அணிந்திருக்கும் போது நெற்றிப் பொட்டு மிக மிக அவசியம். ஆனால் நல்லி சில்க்ஸ் நிறுவனம் அதனை தங்கள் விளம்பரத்தில் தவிர்த்திருந்தது.
வணிகம்
கடும் விமர்சனங்களை முன்வைத்த சமூக வலைத்தளவாசிகள்:
நல்லி சில்க்ஸின் இந்த விளம்பரத்திற்கு சமூக வலைத்தளவாசிகள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
பாரம்பரிய ஆடைகள் அணியும் போது நெற்றிப் பொட்டு வெறும் அழகு சேர்க்க மட்டுமல்லாமல், மங்களகரமான, சுப விஷயங்களைக் குறிக்கும் விதமாகவும் பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய ஆடைகளை நெற்றிப் பொட்டின்றி அணிந்திருப்பது துக்க நிகழ்வைக் குறிப்பது போல இருப்பதாக பல்வேறு வலைத்தளவாசிகளும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் தங்களுடைய முகப்புப் பக்கத்திலும் நெற்றிப் பொட்டில்லாத பெண்களைக் கொண்ட புகைப்படத்தையே பயன்படுத்தியிருக்கிறது நல்லி சில்க்ஸ். சில சமூக வலைத்தள பயனாளர்கள் இதனையும் சுட்டிக் காட்டி தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
நல்லி சில்க்ஸை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்:
Did not expect this from @NalliSilk.
— Kamal Vedā / कमल वेदा (@iKamalVeda) October 18, 2023
Where is the Bindi? #NoBindiNoBusiness pic.twitter.com/NmydqXydF9