ரூ.400 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தங்களது சேவையை விரிவுபடுத்துகிறது மேக்சிவிஷன்
தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்களை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது மேக்சி விஷன் குழுமம். 2,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவிருக்கும் இந்த முதலீடு தொடர்பாக, இன்று தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மேக்சி விஷன் குழுமத்திற்கு, தமிழக அரசுக்குமிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தெலங்கானா மற்றும் ஆந்திராவில் முன்னணி கண் சிகிச்சை வலைப்பின்னல்களுள் ஒன்றான் மேக்சிவிஷன் குழுமம், கடந்தாண்டு திருச்சியில் முதல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம், தமிழகத்திலும் தங்களது சேவை விரிவுபடுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது, மேலும் பல்வேறு தமிழக நகரங்களில் தங்களது சேவையை விரிவுபடுத்தவிருக்கிறது.