ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பிரம்மாண்ட IPO இன்று தொடக்கம்: விலைப் பங்கீடு, பங்குகளின் ஒதுக்கீடு முழு விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், நாட்டின் மிகப்பெரிய பொதுப் பங்கீட்டை (IPO) இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ரூ. 30,213 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ வரும் அக்டோபர் 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கத் திறந்து இருக்கும். ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தனது ஐபிஓ பங்கின் விலையை ரூ. 1,065 முதல் ரூ. 1,119 வரை நிர்ணயித்துள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சத்திற்கு உட்பட்ட அளவிற்குப் விண்ணப்பிக்கலாம். ரூ. 2 லட்சத்திற்கு மேல் விண்ணப்பிப்பவர்கள் NII பிரிவின் கீழ் சேர்க்கப்படுவர். செபி விதிகளின்படி, ஒரு முதலீட்டாளர் சில்லறை மற்றும் NII ஆகிய இரு பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முடியாது; ஏதேனும் ஒரு பிரிவை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
சிறப்பு ஒதுக்கீடு
ரிலையன்ஸ் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு
இந்த பொது பங்கீட்டில் RIL பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சிறப்பு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன
மொத்த ஐபிஓ தொகையில் ரூ. 2,500 கோடி மதிப்பிலான பங்குகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14 நிலவரப்படி RIL பங்குகளை வைத்திருந்த பங்குதாரர்கள் ரூ. 2 லட்சம் வரை இதில் விண்ணப்பிக்கலாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் ஊழியர்களுக்காக ரூ. 500 கோடி மதிப்பிலான பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள ஊழியர்கள் ரூ. 5 லட்சம் வரை விண்ணப்பிக்க முடியும்.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் அக்டோபர் 28 அன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.