Loading...
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மெகா IPO பங்குகள் வர்த்தகம் தொடக்கம்: 21% பிரீமியத்துடன் ரூ.1,359-க்கு அசத்தல் அறிமுகம்
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மெகா IPO பங்குகள் வர்த்தகம் தொடக்கம்

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மெகா IPO பங்குகள் வர்த்தகம் தொடக்கம்: 21% பிரீமியத்துடன் ரூ.1,359-க்கு அசத்தல் அறிமுகம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2026
12:00 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பங்குச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை பிரம்மாண்டமான முறையில் பட்டியலிடப்பட்டுள்ளன. மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) ஆகிய இரண்டிலும் வெளியீட்டு விலையான ரூ.1,119-லிருந்து 21.36% பிரீமியம் உயர்வுடன் ரூ.1,359-க்கு வர்த்தகமாகத் தொடங்கி அசத்தியுள்ளது. இந்திய நிதிச்சந்த வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ ஆகக் கருதப்படும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ரூ.30,200 கோடி மதிப்பிலான பொதுப்பங்கு வெளியீடு, தொடங்கப்பட்ட 100 நிமிடங்களிலேயே முழுமையாக சந்தா செய்யப்பட்டது.

சந்தா

சாதனை படைத்த ரூ.7 லட்சம் கோடி சந்தா

சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் முதன்முறை பங்குச்சந்தையில் அடி எடுத்து வைப்பவர்கள் என 1.38 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்று உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளது.

ஆங்கர் மற்றும் பொது ஏலச் செயல்பாடுகளின் போது ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையிலான பங்குகள் கோரப்பட்டன.

தகுதிபெற்ற நிறுவன அமைப்புகளுக்கான ஒதுக்கீடு வெறும் 10 நிமிடங்களில் முழுமையடைந்தது.

3-ஆம் நாள் முடிவில், வழங்கப்பட்ட 27 கோடி பங்குகளுக்கு எதிராக 655.68 கோடி பங்குகளுக்குக் கோரிக்கை பெறப்பட்டு 22.2 மடங்கு சந்தா செய்யப்பட்டது.

பரிந்துரைகள்

எதிர்கால வளர்ச்சி மற்றும் நிதியியல் பலம்

இந்தியாவில் 42% வயர்லெஸ் சந்தாதாரர்கள், 60% டேட்டா பயன்பாடு மற்றும் 43% ஹோம் பிராட்பேண்ட் சந்தைப் பங்கை கொண்டுள்ள ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், சந்தையில் கட்டண உயர்வை கொண்டுவர முன்னிலை வகிக்கும் என நோமுரா அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், 5G உள்கட்டமைப்புப் பணிகள் பெரும்பாலானவை நிறைவடைந்துள்ளதால், நிறுவனத்தின் மூலதனச் செலவினங்கள் (Capex) நிதியாண்டு 25-இல் 35%-லிருந்து நிதியாண்டு 26-இல் 23% ஆகக் குறையும் எனவும், நிதியாண்டு 29-க்குள் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் முற்றிலும் கடனில்லா நிறுவனமாக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தையில் தடம் பதித்த நாளிலேயே முன்னணி சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தரகு நிறுவனங்கள் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகளை வாங்கப் பரிந்துரை செய்துள்ளன.

ADVERTISEMENT