பெண்களுக்கு ஏற்ற தனி இருக்கை தேர்வை அறிமுகம் செய்தது இண்டிகோ
செய்தி முன்னோட்டம்
எந்தெந்த இருக்கைகளை மற்ற பெண் பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள் என்பதைப் பார்க்க ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டிகோ.
இணையதளத்தில் செக்-இன் செய்யும் போது பிற பெண் பயணிகள், முன்பதிவு செய்துள்ள பெண் பயணிகளின் இருக்கையை பார்க்க இது அனுமதிக்கிறது.
இந்த முயற்சியானது பயண அனுபவத்தை பெண்களுக்கு மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"இணையதளத்தில் செக்-இன் செய்யும் பெண் பயணிகளுக்கு மட்டுமே இந்த அம்சம் தெரியும். இது குறிப்பாக பெண் பயணிகளின் PNR களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது." என்று இண்டிகோ விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இண்டிகோ
ரூ.1,199இல் பயணம் செய்யக்கூடிய சலுகையை அறிவித்தது இண்டிகோ
பெண் பயணிகள், குறிப்பாக தனியாக விமானத்தில் பயணிப்பவர்கள், கூடுதல் பாதுகாப்போடும் வசதியோடும் இருப்பதற்கு மற்றொரு பெண் பயணிக்கு அடுத்த இருக்கையை தேர்வு செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது.
இண்டிகோ விமான நிறுவனம் தனது பெண் பயணிகளின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதற்காக இந்த விருப்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், சந்தை ஆராய்ச்சியும் நடத்தப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, இண்டிகோ, உள்நாட்டு/சர்வதேச விமானங்களில் ஒரு அற்புதமான சலுகையை அறிவித்துள்ளது.
மே 29 முதல் மே 31 வரை முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.1,199/- பயணம் செய்யலாம் எனபதே இந்த சலுகை ஆகும்.
மேலும் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயணங்களுக்கு இது பொருந்தும்.